Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதிகரிக்கும் மலபார் அணில்கள்; சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

அதிகரிக்கும் மலபார் அணில்கள்; சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால், எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதியை உருவாக்குகின்ற‌து.

பகிரவும் WhatsApp Facebook

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் பிர‌தான‌ மலைச்சாலைகளில் அரிய வகை மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே தென்பட்டு வந்த மலபார் அணில்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதிகளான வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள‌ மரங்களில் மலபார் அணில்கள் அதிகளவில் காணப்பட்டு சோலை மரங்களில் இருக்கும் கொட்டம் பழம், ஜாமூன் பழங்களை உண்டு வாழ்ந்து வருகின்றன.

மேலும் சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால், எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதியை உருவாக்குகின்ற‌து. மலைச்சாலை ஓரங்களில் உள்ள வனப்பகுதியில் ருக்கும் மரங்களில் உள்ள மலபார் அணில்களை மலைச்சாலையில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பார்த்து ர‌சித்து செல்கின்றனர். 

ஒரு சிலர் இந்த மலபார் அணில்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பியும் வருகின்றனர். இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி அரிய‌ வ‌கை மலபார் அணில்களை பாதுகாக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி
Nations keen to forge trade agreements with India: Piyush Goyal
அடுத்த செய்தி
Preparations begin to make traditional cake for Christmas

தொடர்புடைய செய்திகள்